Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

மார்பில் இறுக்கம்

$
0
0
கேள்வி:- எனது வயது 58. ஏற்கனவே இரு தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டு குணமடைந்துவிட்டேன். ஆனால், இப்போது அடிக்கடி மார்பில் ஒருவாத இறுக்கம் ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன?


பதில்:- இரு தடவைகள் மாரடைப்பு வந்ததாகச் சொல்கிறீர்கள். அது எப்பொழுது வந்தது. எவ்வளவு கால இடைவெளியில் வந்தது, அதற்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற விபரங்களை நீங்கள் தரவில்லை. குருதிக் குழாய் பைபாஸ் சத்திரசிகிச்சை செய்யப்பட்டதா அல்லது Stent வைக்கப்பட்டதா?

அத்துடன் உங்களுக்கு நீரிழிவு, கொலஸ்டரோல், பிரஷர் போன்ற பாதிப்புகள் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. சளி ஆஸ்த்மா போன்ற சுவாச நோய்கள் இருக்கின்றனவா? இத்தகைய விபரங்கள் இல்லாமல் கருத்துச் சொல்வது பொருத்தமாக இருக்காது.

மாரடைப்பு வந்தவர்களை இருதய நோய் நிபுணர்கள் கிளினிக்கில் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். நீங்கள் தொடர்ந்து அவ்வாறான கண்காணிப்பிற்கு உட்பட்டிருந்தால் மீண்டும் இருதயப் பாதிப்பு ஏதாவது ஏற்பட்டுள்ளதெனில் அதை முன் கூட்டியே கூறுயிருப்பார்கள். எனவே மற்றொரு இருதயப் பாதிப்பாக இருக்காது.

நீங்கள் கூறும் 'மார்பில் ஒருவாத இறுக்கம்.'என்பது தசைப்பிடிப்பாகவே இருக்கும் என நம்புகிறேன். ஆஸ்த்மாவின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். எதற்கும் உங்கள் இருதயநோய் மருத்துவ நிபுணரை மீண்டும் ஒருமுறை கண்டு விபரமாகப் பேசுவது நல்லது.

இரண்டு முறை மாரடைப்பு வந்ததெனில் நீங்கள் சரியான வாழ்க்கை மற்றும் உணவுமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

மாரடைப்பு வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் சிலவற்றை கூறுகிறேன். இவற்றை நீங்கள் ஏற்கனவே கடைப்பிடிக்காவிடில் இனியாவது செய்யுங்கள்.

காய்கறி, பழவகைகள், மீன், தவிடு நீக்காத அரிசி போன்றவை உட்படும் ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ண வேண்டும். பட்டர், நெய், சீஸ், கொழுப்புள்ள இறைச்சி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பால் அருந்த விருப்பமாயின் கொழுப்பு நீக்கியதாக இருக்க வேண்டும்.

சமையலிலும் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பொரிப்பது, வதக்குவது, போன்றவை நல்லதல்ல. அவிப்பது, ஆவியில் வேகவைப்பது, எண்ணெயின்றி வறுப்பது, மைக்ரோவேவ் போன்ற சமையல் முறைகள் நல்லவையாகும்.

உணவில் சேர்க்கும் எண்ணெயானது ஒலிவ் ஓயில், சூரியகாந்தி, சோயா போன்றவையாக இருப்பது விரும்பத்தக்கது. ஆனால் அவை பொரிப்பதற்கு ஏற்றதல்ல.

மதுபானம், புகைத்தல் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
தினசரி 30 நிமிடங்களுக்கு குறையாத உடற்பயிற்சி செய்வது அவசியம். சோம்பேறியாக கதிரையில் உட்கார்ந்து ரீவி கொம்பியுட்டர் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

எடையைச் சரியான அளவில் பேண வேண்டும். எடை அதிகரிப்பானது உங்கள் இருதயத்திற்கான வேலைப் பளுவை அதிகரித்து இருதயநோய்களை மீண்டும் கொண்டு வரலாம்.

மாரடைப்பின் பின் பலர் விதவிதமான விற்றமின்களை அவசியமின்றி உபயோகிக்கிறார்கள். விற்றமின் Vit C, E போலிக் அமிலம் போன்றவை எந்தவிதத்திலும் மாரடைப்பு மீண்டும் வராது தடுக்க உதவாது. வீண் செலவு மட்டுமே. விற்றமின் E சற்று தீங்கானது என்றும் சொல்லலாம்.

சில வருடங்களுக்கு முன்னர் எழுதியது

0.00.0




Viewing all articles
Browse latest Browse all 292

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>