சிரித்த முகத்துடன் வந்த அந்தச் சிறுமி வேதனையை அடக்கிக் கொண்டு தான் புன்னகைத்தாள் என்பதை புரிந்து கொள்ள பெரிய திறமை தேவையில்லை.
"தலையை சொறிஞ்சு பிராண்டிக் கொண்டு திரிந்தாள். இப்ப தலை அவிஞ்சு நீர் வடியுது"என்றாள் தாய் சினத்துடன். அரியண்டப் படுவது போலவும் தெரிந்தது.
ஆம் அவளது தலையில் அவிச்சல் ஏற்பட்டிருந்தது. சீழ் வடிந்து முடிகள் ஒட்டுப்பட்டுக் கிடந்தன. சற்றே துர்நாற்றமும் அடித்தது. கிருமி (பக்ற்ரீரியா) தொற்று ஏற்பட்டு சிறிய காச்சலும் அடித்தது.
ஆம் அவளது தலையில் அவிச்சல் ஏற்பட்டிருந்தது. சீழ் வடிந்து முடிகள் ஒட்டுப்பட்டுக் கிடந்தன. சற்றே துர்நாற்றமும் அடித்தது. கிருமி (பக்ற்ரீரியா) தொற்று ஏற்பட்டு சிறிய காச்சலும் அடித்தது.
கழுத்தில் நெறி போட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள்.
அன்ரிபயோடிக் (Antibiotic) கிரீம் மாத்திரைகளை கொடுத்து புண்களை விரைவாக குணப்படுத்த முடியும்.
ஆனால் அவள் ஏன் சொறிந்தாள். அதற்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளித்தால்தான் மீண்டும் வராமல் தடுக்க முடியும்.
தலையில் பேன், வட்டக்கடி (Tinea capitis) போன்ற பங்கஸ் தொற்று, சொராயிசிஸ் (Psoriasis) , எக்சிமா (Dermatitis) போன்ற பல காரணங்கள் தலைக் கடிக்கு மூல காரணமாக இருக்கலாம்.
தலைமுடியை சுத்தமாக பேணாமல் இருப்பது மிக முக்கியமான காரணமாகும்.
தலை முடி அடர்த்தியான பிள்ளை பருவத்தில் அடிக்கடி முழுக வார்க்க வேண்டும். சளி பிடித்துப் போடும் என்று சொல்லி தலை கழுவதை தள்ளி போடும் பல தாய்மார்கள் இருக்கிறார்கள்.
அது தவறு. இந்த வெக்கை யான பிரதேசத்தில் வாரத்திற்கு இரண்டு தடவைகளாவது முழுக வார்க்க வேண்டும்.
தலையில் அழுக்கு இருந்தால்தான் கிருமிகள் தொற்றி தலையும் அவியும். சளியும் பிடிக்கும் என்பதை நினைவில் வைத்திருங்கள் பெற்றோர்களே.
0.00.0