குந்திதேவியானவள் சூரியனுடன் கூடிக் கர்ணனைப் பெற்றெடுத்தாள் என்கிறது மகாபாரதம். குதிரைத் தலையுடைய அரசகுமாரி மாவிட்டபுரம் வந்தாள் என்கிறது ஐதீகக் கதை.
குதிரையின் தலையுடன் மனித உடல் அவளுக்குக் கிடைத்ததாயின் அதற்கான மரபணு எங்கிருந்து வந்தது. அவளது தந்தை ஒரு குதிரையா?
இவை யாவும் ஐதீகங்களும் புராணக் கதைகளும் ஆகும். உண்மையில் ஒரு இன விலங்கு மற்றொரு இனத்தைச் சேர்ந்த விலங்குடன் புணர்வதும் அதன் பயனாக இரண்டும் கலந்ததான உருவத்துடன் ஒரு புதிய மிருகம் உருவாவதும் விஞ்ஞான ரீதியாகச் சாத்தியமில்லாத விடயங்களாகும். மரபணுக்களின் மாற்றங்களுடாக ஏற்படும் பரிணாம வளர்ச்சியின் விளைவாகவே புதிய உயிரனங்கள் தோன்றியிருக்கின்றன.
இலட்சக்கணக்கான வருடங்களில் சூழலின் தாக்கத்தால் படிப்படியாக ஏற்படும் பரிணாம மாற்றங்களை, ஒரு சில மாதங்களில் சோதனைக் குழாயில் ஏற்படுத்திவிட முடியும் என இன்றைய விஞ்ஞான அறிவும் நவீன தொழில் நுட்பங்களும் முயல்கின்றனவா? அல்லது அது வெறும் கனாக் காணல் மட்டும்தானா?
'உங்கள் கருவில் நியன்டதால் குழந்தை வளர உங்கள் கருப்பையை இரவல் தாருங்கள்' போன்ற பரபரப்பான தலையங்கங்கள் மேற்குலக ஊடகங்களில் அண்மையில் வெளியாகியிருந்தன.
இலட்சக்கணக்கான வருடப் பரிமாண மாற்றத்தில்தான் இன்றைய உடல் அமைப்பையும் மூளை வளர்ச்சியையும் தற்கால மனிதன் பெற்றிருக்கிறான்.
மனித இனத்தின் மூதாதையர்களுக்கு இப் பூமியில் குறைந்தது சுமார் 500,000 ஆண்டு சரித்திரம் உள்ளது. முன்பு இது 300,000 ஆண்டுகள் எனக் கருதப்பட்டது.
ஆனால் சிலகாலத்திற்கு முன்பு ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட சில கல்லாயுதங்கள் இதன் காலத்தை முன்நகர்த்தியுள்ளன. அவை கல்லால் செய்யப்பட்ட ஈட்டிகளாகும்.
மிருகங்களைத் தாக்கிக் கொல்லும் அளவிற்கு கல்லைக் கூராக்கி அதை வலுவான தடியில் பிணைத்து ஈட்டியாகத் தயாரிக்கக் கூடிய தொழில்நுட்பத்தை மனித இனத்தின் மூதாதை இனமான
Homo heidelbergensisபல இலட்ச வருடங்களுக்கு முன்பே பெற்றிருந்தன. புராணக் கதைகளின் கற்பனைகளுக்குள்ளும் அகப்படாத பூமியின் யவ்வனக் காலம் அது.
அந்த இனத்திலிருந்து தோன்றி, தற்கால மனித இனத்திற்கு (Homo sapiens)சமாந்திரமாக வாழ்ந்த மற்றொரு இனம்தான் நியன்டதால் மனித
(Homo neanderthalensis)இனமாகும். இந்த நியன்டதால் இனம் முற்றாக அழிந்து 33,000 வருடங்களாவது இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்த நியன்டதால் மனிதக் குழந்தைதான் இப்பொழுது பேசு பொருளாகியுள்ளது.
அவற்றின் எலும்புகள் மண்டை ஓடுகள் போன்றவை பல காலத்திற்கு முன் கண்டறியப்படாலும், சில வருட காலங்களுக்கு முன்னரே நியன்டதால் இனத்தின் மரபணுக் கூறுகளை (DNA) விஞ்ஞானிகளால் பிரித்தறிய முடிந்தது.
இதைத் தொடர்ந்த ஆய்வுகளின் பயனாக, இன்றைய மனிதனின் மரபணுக்களில் 1 முதல் 4 சதவிகிதம் வரையானவை நியன்டதால் இனத்திலிருந்து வந்ததாக ஆய்வுகள் கூறிகின்றன. இது போன்ற ஆய்வுகளின் அடிப்படையிலேயே ஆதிமனிதனுக்கும் நியன்டதால் மனிதனுக்கும் இடையே புணர்ச்சியும் இனப் பெருக்கமும் நடந்திருக்கலாம் எனச் சில ஆய்வாளர்கள் கருதினார்கள்.
இந்த நிலையில் Harvard Medical School இன் பேராசிரியர் Prof George Church வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட கருத்துத்தான் ஊடகங்களில் மும்முரமாக அடிபட்டன.
'நீங்கள் இளமையும் தைரியமும் துணிகரமுமான பெண் ஆயின் ஒரு நியன்டதால் கருவை உங்கள் கருப்பையில் சுமக்கலாம்' என அழைத்தார். எவரது தூண்டுதலின்றி, தன்னிச்சையான மனவிருப்புடன் தனது ஆய்விற்கு உதவ யாராவது ஒரு பெண்ணை முன்வருமாறு அழைத்ததாகச் செய்திகள் வெளிவந்தன.
மனிதனுக்கு இணையாக மற்றொரு புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்குவதற்கான முன்முயற்சியாகக் கருதப்பட்ட அக் கூற்று பலவிதமான வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளானது. தான் அவ்வாறு கூறிவில்லை எனப் பின்னர் மறுதலித்திருக்கிறார்.
'குளோனிங் முறையில் ஒரு நியன்டதால் குழந்தை உருவாக்கப்பட்டால் மனித மனம் எவ்வாறு செயற்படுகிறது என்பது பற்றி மேலும் துல்லியமாக அறிய முடியும்' என்பதே அவர் கூற்று. அதாவது 'கோட்பாட்டு ரீதியாக உருவாக்கப்பட்டால்' என்று கூறினாராம்.
உருவத்தில் குட்டையானதும், உடல் முழுவதும் உரோமம் செறிந்ததும், இன்றைய பார்வையில் அவலட்சணமானதும், தொடர்பாடல் திறனற்றதுமான ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க எந்தப் பெண் முன்வருவாள்.
எனவேதான் 'அவர் முதலில் தன்னில் ஆராச்சியைத் செய்யட்டும்' எனப் பலர் கிண்டலடித்தார்கள்.
தனது உடலைப் பலிகடாவாக்கி ஆய்வைச் செய்வதற்கான அர்பணிப்புணர்வு அவருக்கு இருக்கிறதா என்பதைப் பற்றி நாம் அறியோம். ஆனால் அர்ப்பணிப்புள்ள பல விஞ்ஞானிகள் தங்கள் உடலைத் தாரைவார்த்திருப்பதை சரித்திர ஏடுகளிலிருந்து அறிகிறோம்.
விஞ்ஞான உண்மைகளைக் கண்டறிவதற்காக, அவற்றை உறுதிப்படுத்துவதற்காக அவ்வாறு செய்திருக்கிறார்கள். அறிவியலில் புதிய எல்லைகளை எட்ட வேண்டும் என்ற அவாவில் தம்மையே ஆராச்சிப் பொருளாக்கி இருக்கிறார்கள்.
தமது காலத்தில் பைத்தியம் என மற்றவர்களால் பட்டம் சூட்டப்பட்டு ஏளனம் செய்யப்பட்ட அத்தகைய பல சுயபரிசோதனையாளர்கள் வரலாற்றில் இன்றும் போற்றப்படுகிறார்கள்.
இருதயத்திற்குள் குழாயைச் செலுத்தி (Cardiac Catheterization)பரிசோதனைகள் செய்வதும் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்வதும் இன்று சர்வசாதாரண விடயமாகிவிட்டது. ஆனால் 1929ம் ஆண்டு ஜேர்மனியரான Werner Forssmann இருதயத்திற்குள் குழாயைச் செலுத்த முதன் முதலில் முற்பட்டபோது சக மருத்துவர்கள் ஆபத்தானது எனக் கருதி ஒத்துழைக்க மறுத்தனர்.
எனவே இரகசியமாகத் தனக்குத்தானே செய்து கொண்டார். உதவிக்கு ஒரு தாதி மட்டுமே இருந்தார். அவ்வாறு செய்த பின்னரும் இவரது ஆய்வு ஏற்றுக் கொள்ளப்படாது எள்ளி நகையாடப்பட்டது. இதனால் இருதய சிகிச்சை பிரிவை விட்டு சிறுநீரகச் சிகிச்சைக்கு மாற வேண்டிய அவலம் நேர்ந்தது. ஆனால் 27 வருடங்களுக்குப் பிறகு 1956 ல்தான் இவரது ஆற்றல் மருத்துவ உலகுப் புரிந்தது. நோபல் பரிசும் கிட்டியது.
மாறாக ரஷ்ய மருத்துவரான Alexander Bogdanov வின் பரிசோதனை முயற்சிகள் அவரது உயிரையே பறித்துவிட்டது.
குருதிப் பகுப்பு இனங்கள் பற்றியும், குருதி மாற்றீட்டால் நோய்கள் தொற்றுவது பற்றியதுமான தெளிவான அறிவுகள் இல்லாத காலத்தில குருதி மாற்றீடு (blood transfusion)பரிசோதனை ஆய்வுகளைச் செய்ய ஆரம்பித்தவர் இவராவார். லெனினின் சகோதரியும் இவரது முயற்சிகளில் ஆர்வம் காட்டி ஒத்துழைத்துள்ளார். தனக்குத்தானே குருதி மாற்றீடு செய்தார். பரிதாபம். குருதியை இவருக்குத் தானம் செய்த மாணவனுக்கு இருந்த மலேரியாவும், சயரோகமும் குருதி ஊடாக இவருக்குத் தொற்றியதால் தனது உயிரையே பறிகொடுக்க வேண்டிய அவலம் நேர்ந்தது.
இத்தகையவர்கள் சரித்திர காலத்தில்; மட்டும் வாழவில்லை. இன்றும் எம்மிடையே வாழ்கிறார்கள்.
இரைப்பைப் புண்கள் ஏற்படுவதற்குக் காரணம் Helicobacter pyloriஎன்ற பக்றீரியா என்பதை இன்று நாம் அறிவோம். ஆனால் இதை நிரூபிப்பதற்காக தனக்குத்தானே அந்த பக்றீரியாவைத் தொற்ற வைத்தவர் அவுஸ்திரேலியாவைச் சார்ந்த மருத்துவரான Barry Marshallஆவார். தனது கோட்பாட்டை சரியென நிரூபிக்க அவரால் முடிந்தது. 2005ம் ஆண்டில் அதற்காக நோபல் பரிசும் பெற்றார்.
ஆனால் சிலரது சுய ஆய்வுகள் முன்னரும் தவறான முடிவுகளையும் தந்துள்ளன.
மஞ்சள் காய்ச்சல் (Yellow fever) பற்றி அறிந்திருப்பீர்கள். இது எங்களது செங்கண்மாரி அல்ல. இது பொதுவாக ஆபிரிக்க மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் காணப்படுகிறது. ளுவரடிடிiளெ குகசைவா என்பவர் 1784–1820 காலப்பகுதியில் வாழ்ந்த ஒரு அமெரிக்கராவார். மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு தொற்று நோயல்ல என அவர் திடமாக நம்பினார். இதை நிரூபிக்க தன்னிலேயே ஆய்வுகளைச் செய்தார்.
அவர் மருத்துவ மாணவனாக இருக்கும்போதே ஆய்வுகளில் ஈடுபடுமளவிற்கு மன உறுதியும் அர்ப்பணிப்பும் உள்ளவராக இருந்தார். இந்த மஞ்சள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியின் வாந்தியை அவர் தனது உடற் காயங்களுக்குள் முதலில் ஊற்றினார். அவருக்கு நோய் தொற்றவில்லை.
இதனால் துணிவு பெற்ற அவர் நோயாளியின் வாந்தி, வியர்வை, குருதி, மற்றும் சிறுநீரை தனது கண்களிற்குள் ஊற்றினார். உடலிலும் தடவினார். ஆயினும் அப்பொழுதும் அவருக்கு நோய் தொற்றவில்லை.
இறுதியாக நோயாளியின் வாந்தியை உட்கொண்டார். முதலில் மாத்திரை வடிவிலும், பின்னர் நேரடியாக தனது வாயினாலும் உட்கொண்டார். ஆனாலும் அவருக்கு நோய் தொற்றவில்லை. எனவே மஞ்சள் காய்ச்சல் நோயானது தொற்று நோயல்ல என்ற முடிவிற்கு வந்தார். இதை மருத்துவ உலகமும் அந்நேரத்தில் ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது. ஏனெனில் அவ் ஆராச்சிகளின் பலனாக இவருக்கு மருத்துவப் பட்டம் கிடைத்தது.
ஆனால் அவரது ஆராச்சி முடிவு தவறானது. அது தவறு என்று தெரிய பல தசாப்தங்கள் சென்றன. உண்மையில் அது தொற்று நோய்தான். ஆனால் மனிதனிலிருந்து மனிதனுக்கு நேரடியாகத் தொற்றுவதில்லை. அந்த வைரஸ் கிருமியானது நேரடியாகக் குருதிக்குள் மட்டுமே தொற்றுகிறது. அதாவது நுளம்புக் கடி மூலம் தொற்றுகிறது என்பதை அமெரிக்க இராணுவ சத்திரசிகிச்சை மருத்துவரான துநளளந டுயணநயச கண்டறிந்தார்.
நியன்டதால் குழந்தை விடயத்தில் பேராசிரியர் George Church பின் வாங்கிவிட்டார் எனச் சிலர் சொல்கிறார்கள். மதரீதியான Churchவிஞ்ஞானியும் பேராசிரியருமான Churchயை தன் அடிப்படைவாதத்தின் முன் கைகட்டி வாய்பொத்தி அடங்கி நிற்க வைத்துவிட்டதா?
தனது கூற்று தவறாக விளங்கப்பட்டதாகவே பேராசிரியர் Churchகூறுகிறார்.
அல்லது அவ்வாறு குளோனிங் முறையில் நியன்டதால் குழந்தையை உருவாக்குவதற்கான விஞ்ஞான அறிவும் தொழில் நுட்ப வசதிகளும் இன்னமும் ஏற்படவில்லை என்றும் நாம் கருதலாம்.
எவ்வாறாயினும் தூரநோக்கும், பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத ஆர்வமும், சற்று அசட்டுத் துணிவும், இருந்தால்தான் மனித குலம் சற்றேனும் எதிர்பார்திராத விஞ்ஞான கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும் போலத் தெரிகிறது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

![]() |
english.news-vault.com - |

Thanks:- www.news.com.au |

Thanks:- pertheducationcity.com.au |

சமகாலம் சஞ்சிகையின் அறிவியல் களரி பகுதியில் வெளியான எனது கட்டுரை.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0