Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

மூக்கால் இரத்தம் வடிதல்

$
0
0
 "என்ரை பிரசரை ஒருக்கால் பாருங்கோ"

கைக்குட்டையால் மூக்கை ஒரு கையால் பிடித்தவர் மற்றதை கைலாகு கொடுப்பது போல முன்னே நீட்டியபடி அந்தரப்பட்டு ஓடி வந்தார்.

"முதலிலை பதற்றப்படாமல் உட்காருங்கோ. என்ன பிரச்சனை"என வினவினேன்.

"பிரசர் தலையிலை அடிச்சுப்போட்டுதோ தெரியவில்லை: என்றார். அவரது கைக்குட்டை நனைந்து கிடந்தது என் கவனத்தை ஈர்த்தது. ஆனால் அதில் சளி இருந்ததே ஒழிய இரத்தக் கறை இருப்பதாகத் தெரியவில்லை

"மூக்காலை இரத்தம் சளியோடை வருகுதோ அல்லது தனி இரத்தமா ஓடுதோ"என விபரம் கேட்டேன். "சீறச் சீறச் சளியோடுதான் வருகுது"என்றார்.


மூக்குச் சளியோடு இரத்தம் கலந்து வருவது பெரும்பாலும் கிருமித் தொற்றால் ஏற்படுவதாகும். மூக்கின் அருகில் இருக்கும் காற்றறைகளில் தொற்று ஏற்படுவதே காரணமாயிருக்கும். இது தனி இரத்தமாக இருக்காது சளியுடன் நேர்ந்து சற்று வரும்.

காற்றறைகள்

ஆனால் சளிப் பிரச்சனை இன்றியும் சிலநேரங்களில் மூக்கிலிருந்து இரத்தம் அதிகளவில் சிந்துவதுண்டு. இதுவே பலரையும் கிலிகொள்ளச் செய்வதாக இருக்கிறது. இரத்தம் வருவது ஓரு மூக்கிலிருந்தாக இருக்கலாம். அல்லது இரண்டிலிருந்தும் வரக் கூடும். ஒரு சில செகண்டுகள் முதல் பல நிமிடங்கள் வரை மூக்கிலிருந்து குருதி வருதல் தொடரக் கூடும்.

பொதுவாகக் குழந்தைகளிலேயே அதிகம் காணக் கூடியதாக இருந்தாலும் பெரியவர்களிலும் காண முடிகிறது.

பல வயதானவர்களில் மூக்கால் வடியும் இரத்தம் அதிகமாக ஏற்படுவதற்குக் காரணம் அவர்கள் தினசரி உட்கொள்ளும் மருந்தாக இருக்கலாம். நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல், இருதய நோய்கள் போன்றவை முதியவர்களிடம் அதிகமாக இப்பொழுது காணப்படுகிறது.

இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் அவர்களுக்கு வருவதைத் தடுப்பதற்காக குருதி உறையும் வேகத்தைத் தணிக்கும் அஸ்பிரின், குளொபிடோகிறில், வோர்பரின் போன்ற மருந்துகளில் எதையாவது அவர்கள் தினசரி உட்கொள்கிறார்கள். இதனால் மூக்கால் இரத்தம் வடிய நேர்ந்தால் அது உறையாது நீண்ட நேரம் தொடரலாம்.

என்ன செய்ய வேண்டும்

மூக்கால் இரத்தம் வடிந்தால் பதற்றப்படாதீர்கள். மூக்கை சீறிச் சிந்தாதீர்கள். தண்ணீர் அடித்துக் கழுவாதீர்கள். மூக்கைக் குடையாதீர்கள். இவை இரத்தம் வடிவதைத் தடுப்பதற்குப் பதிலாக மோசமாக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மூக்கை அழுத்திப் பிடிக்க வேண்டும். நாசித் தூவாரத்திற்கும் மூக்கு எலும்பு இருக்கும் இடத்திற்கும் இடைப்பட்ட பகுதியை அழுத்திப் பிடியுங்கள்.



விட்டு விட்டுப் பார்க்காது தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு அவ்வாறு அழுத்திப் பிடித்திருப்பது அவசியம்.


மூக்கால் குருதி வடியும்போது, படுக்கக் கூடாது. நிமிர்ந்து உட்காருங்கள். முற்புறமாக முகத்தைச் சரித்துப் பிடித்தபடி, வாயால் சுவாசித்துக் கொண்டு மூக்கை அழுத்திப் பிடியுங்கள். தொண்டைக்குள் இரத்தம் வடிந்து மூச்சுத் திணறடிப்பதை தடுப்பதற்காகவே முற்பக்கமாக சரிந்திருப்பது அவசியமாகும்.

தற்செயலாக வாயிற்குள் இரத்தம் வந்துவிட்டால் அதைத் துப்புங்கள். இல்லையேல் வாந்தியும் சேர்ந்து வரக் கூடும்.

மூக்கால் இரத்தம் வடிவது நின்ற பின்னரும் 24 மணி நேரத்திற்கு அவதானமாக இருங்கள்.

மூக்கைக் குடையாதீர்கள், தும்மாதீர்கள், மூக்கைச் சீறாதீர்கள். மூக்கினுள் இரத்தம் உறைந்து கட்டியாக இருந்தாலும் அதை அகற்ற முனையாதீர்கள். இவை மீண்டும் இரத்தம் வடிவதைத் தூண்டக் கூடும்.

மூக்கைச் சீறாதீர்கள்

எவ்வாறு ஏற்படுகிறது

மூக்கின் உட்பகுதி இரத்த ஓட்டம் மிகுந்ததாகும். நுண்ணிய குருதிக் குழாய்கள் நிறைந்திருக்கின்றன. மூக்கைக் கிண்டுவது, துளாவுவது, மூக்குச் சீறுவது போன்றவற்றால் ஏற்படும் சிறிய காயங்கள் மூக்கிலிருந்து குரதியைச் சிந்தவைப்பதற்குப் போதுமானதாகும்.

மூக்கின் உட்பகுதியானது எப்பொழுதும் ஈரலிப்பாகவே இருக்கும். ஆனால் அது காய்ந்து வரண்டு சொரசொரப்பாக இருந்தால் சிறிய காயங்கள் ஏற்பட்டாலும் இரத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். முக்கியமாக தடிமன் சளி போன்ற கிருமித் தொற்றுகளின் போது நிகழலாம். கடுமையான குளிரின் போதும் இது நிகழலாம்.

காரணங்கள்

மூக்கைக் குடைவது முக்கியமாக நகமுள்ள விரல்களால் குடைவது, கடுமையாச் சீறுவது போன்றவை பற்றி ஏற்கனவே சொன்னோம்.

மூக்கு வளைந்திருப்பது மற்றொரு காரணமாகும். சிலருக்கு இயற்கையாகப் பிறப்பிலும் வேறு சிலருக்கு அடிப்பட்ட காயங்களாலும் மூக்கின் உள்ளெலும்பு வளைந்திருப்பதால் சிறுகாயங்கள் ஏற்படுவதற்கும் இரத்தம் வடிவதற்குமான சாத்தியம் அதிகமாகும்.

தடிமன், மூக்கடைப்பு, சைனசைடிஸ் போன்ற தொற்றுகளும் காரணமாகலாம்.

தூசி, மகரந்தம் போன்றவற்றிற்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் வரலாம். உயர்ந்த மலை போன்ற  உயரமான இடங்களுக்கு செல்லும்போது வளி அழுத்த வேறுபாடுகளாலும் ஏற்படுவதுண்டு.

மூக்கடைப்பை தடுப்பதற்கு கொடுக்கப்படடும் சில மருந்துகளை மருத்துவ ஆலோசனை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதாலும் ஏற்படலாம்.

குருதி உறைதல் குறைபாட்டு நோய்கள், ஈரல் சிதைவு நோய்கள் குருதிப் புற்று நோய் போன்ற காரணங்களாலும் சில தருணங்களில் மூக்கால் இரத்தம் வடியக் கூடும்.

சாதாரணமாக இரத்தம் வடிதல் மூக்கின் முற்புறம் இருந்தே வருகிறது. ஆயினும் மூளையை நெருங்கி இருக்கும் மூக்கின் பிற்புறம் (posterior nosebleed)  இருந்தும் இரத்தம் வடியக் கூடும். இது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. முக்கியமாக வயதானவர்களில் ஏற்படும். மூக்கில் அண்மையில் செய்யப்பட்ட சத்திரசிகிச்சை, கொலஸ்டரோல் பிரச்சனை போன்றவற்றல் இரத்தக் குழாய்கள் தடிப்படைதல், மிகக் கடுமையான உயர் இரத்த அழுத்தம், கட்டிகள் வளர்தல், போன்றவை காரணமாகலாம்.



சிகிச்சை

பெரும்பாலும் சிகிச்சை எதுவும் தேவைப்படாது. தானாகவே நின்றுவிடும்

தானாக நிற்காவிட்டால் ஆரம்பத்தில் சொன்ன முதலுதவி முறைகளைக் கடைப்பிடியுங்கள்.

ஐஸ் பக் வைப்பதும் உதவலாம்.

இருதப் போக்கு மிகக் கடுமையாக இருந்தால் அல்லது முதலுதவி சிகிச்சைகளை செய்தபோதும் 20 - 30 நிமிடங்களுக்குள் மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நிற்காவிட்டால மருத்துவரைக் காணுங்கள். இரத்தப் போக்கால் உடல் வெளிறுவது, இருதயத் துடிப்பு வேகமாவது, மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்காது மருத்துவரை அணுகவேண்டும்.

நோயின் தாக்கத்திற்கும் காரணத்திற்கும் ஏற்ப பலவித சிகிச்சை முறைகளை மருத்துவர்கள்  கையாளக் கூடும்.

கோஸ் துணியைக் கொண்டு குருதி வடியும் மூக்கினுள் அடைத்தல் செய்யக் கூடும்


குருதி பெருகும் இடத்தை தெளிவாகக் கண்டு பிடித்தால் இவ்விடத்தை  சில்வர் நைரேட் போன்ற இரசாயனங்களால் அல்லது மின்கோலால் சுட்டு அடைக்கக் கூடும்.

இருந்தபோதும் மூக்கின் புறமிருந்து ஏற்படும் இரத்தம் வடிதலுக்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை வெய்ய நேரிடும்.

மருந்துகள் காரணமாயிருந்தால் மருத்துவர்கள் அவற்றின் பாவனையை மறுபரிசீலனை செய்வார்கள். முற்கூறிய அஸ்பிரின் குளொபிடகிறில் மட்டுமின்றி பெரும்பாலான வலிநிவாரணி மருந்துகளும் குருதிப்பெருக்கை தீவிரப்படுத்தக் கூடும். எனவே அவற்றை மருத்துவ ஆலோசனை இன்றிப் பயன்படுத்த வேண்டாம். இருந்தாலும் பரசிட்டமோல் மருந்து பாதுகாப்பானது.

புகைத்தல் பழக்கமானது நாசியை வரட்சி அடையச் செய்து இரத்தம் வடிவதைத் தூண்டக் கூடும் என்பதால் புகைத்தலைத் தவிருங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.00.0


.


Viewing all articles
Browse latest Browse all 292

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 204 - அகத்தியர் அறிவுரை - 20


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


சோழர் பாசன திட்டம் என்றால் என்ன? அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை-பின்னணி...


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>