Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

கவர்ச்சியானவற்றில் செல்லச் சீண்டல்கள் Cute aggression

$
0
0
கவர்ச்சியான (Cute) எதைக் கண்டாலும் அது எம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். உருண்டு திரண்ட முகம், சூட்டிகையான கண்கள், வனப்பான கன்னங்கள். கிள்ள வேண்டும் போலத் தோன்றவே செய்யும் அல்லவா?


அத்துடன் முந்திரிப் பழம்போல மூக்கு, நேர்த்தியான வளைவுகளுடன் கூடிய குளிர்ச்சியான உதடுகள். கட்டியணைத்து கொஞ்ச வேண்டும் போலத் தோன்றாதா?


நான் இங்கு சொல்ல வருவது காமக் கண்களுடன் பெண்களை நோக்கும் ஆண்களின் வக்கிரப் பார்வையை அல்ல. அழகான குழந்தை மீது, பட்டுப் போல மிருதுவான பூனை மீது, கொழுகொழுவென கண்களால் சிரிக்கும் நாய்க் குட்டிகள் மீதான ஆத்மார்த்தமான ஈர்ப்பு பற்றியது.


அது எந்த உயிராகவும் இருக்கலாம். அவற்றின் மது எமக்கு ஏற்படும் கவர்ச்சி, ஆனந்தம், உளச் சிலிர்ப்பு போன்றவை பற்றியே ஆகும்.

ஆனால் இந்த ஈர்ப்பானது உயிர் அற்றனவற்றின் மீதும் ஏற்படலாம். அதாவது புகைப்படங்கள் ஓவியங்கள் சிற்பங்கள் போன்றவை. உதாரணமாக ரீவி பார்க்கும்போது மலர்போல விரிந்த கண்களும் குட்டி மூக்கும் அழகான வாயும் கொண்ட எலி பூனை கரடி ஓநாய் போன்றவற்றின் கார்ட்டுன் படங்கள் எம்மை ஈர்ப்பதில்லையா?

உயிருள்ள உயிரற்ற எந்த உண்மையான அழகையும் கவர்ச்சியையும் கண்டாலும் மனத்தில் ஒரு குதாகலம் ஏற்படும். ஆனந்தம் பொங்கும். மனம் நிறையும். ஏதோ ஒரு சுகம் நம்மை அணைத்துக் கொள்ளும்.
நளினத்தின் மீதான ஈர்ப்பு உலகளாவியது. எந்த இனத்திற்கு மதத்திற்கு மொழிக்கோ தேசத்திற்கோ மட்டுப்பட்டதல்ல.

ஆனால் அவ்வளவு மட்டும்தானா?

கொஞ்சவேண்டும் அள்ளி அணைக்க வேண்டும் என்ற ஆசைகளுடன் நின்றுவிடுமா?



அதற்கு அப்பாலும் செல்கிறது. ஒரு வகை வன்முறைச் சீண்டல் அல்லது ஆக்கிரமிப்பிற்கும் (aggression)  இட்டுச் செல்கிறது என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.

"கடித்துத் தின்ன வேண்டும் போலிருக்கிறது"என ஆப்பிள் திரண்ட மொழுமொழுவென இருக்கும் குழந்தையின் கன்னத்தைப் பார்த்து விளையாட்டுப் போலச் சொல்வதில்லையா?

"அப்படியே சப்பிச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது"எனத் திராட்சை போல செந்நிறமான உதடுகளைப் பார்த்து நீங்கள் கூட எப்பொழுதாவது சொல்லியது ஞாபகம் வருகிறதா?

காய்சலுடன் ஒரு குழந்தை காய்ச்சலோடு மருத்துவரிடம் வந்தது. அதன் பிரச்சனைகளை அனுதாபத்தோடு கேட்டு, அதனை பரிவோடு சோதித்து அதற்கான சிகிச்சையை வழங்கினார் அந்த மருத்துவர். பின்னர் அது புறப்படும்போது "எல்லாம் சுகமாகிப் போடும். வீட்டை போய் ரெஸ்ட் எடுங்கோ. கொஞ்சம் விளையாடுங்கோ"என்று சொல்லும் போது அதன் கன்னங்களை செல்லமாகக் கிள்ளினார்.

இது ஒரு ஒரு உதாரணம். எதனை உணர்த்துகிறது. கிள்ளுவதானது அவரது உள்ளத்தில் மறைந்திருக்கும் வன்மத்தின் வெளிப்பாடா? இல்லை! அழகான அந்தக் குழந்தையில் அவருக்கு அன்பு இருக்கிறது. பரிவோடு பார்க்கிறார். அதற்கு உதவ முன்வருகிறார். அதன் வேதனையைதை; தீர்க்க வேண்டும் என எண்ணுகிறார். ஆனால் அதே நேரம் அதைக் கிள்ளவும் செய்கிறார்.

அன்பு ஆதரவு பட்சாபிதம் போன்ற நேர்மறையான எண்ணங்குளம் இருக்கின்றன. அதே வேளை கிள்ளுவது போன்ற அடாத்துச் செயலும் இருக்கிறது. இது எதிர்மறையான செயற்பாடு அல்லவா? இவை இரண்டும் ஒன்றுக்கு ஓன்று முரணான உணர்வுகள் அல்லவா? இது ஏன்?

குழந்தைகள் பொம்மைகளுடன் ஆசையோடு விளையாடுவார்கள், கொஞ்சுவார்கள, தாலாட்டுவார்கள். ஆராரோ பாடி தூக்க வைப்பது போலவும் செய்வார்கள். ஆனால் சில நேரத்தில் அவற்றை இறுக அழுத்துவதும் உண்டு. அவற்றின் கண்களைக் குத்துவதும் உண்டு. இவையும் ஒன்றுக்கு ஒன்று முரணான செயல்கள் அல்லவா? அழகியவற்றைக் காணும்போது ஏன் அத்தகைய ஒன்றுக்கு ஒன்று முரணான உணர்வுகள் ஏற்படுகின்றன.

காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பல விளக்கங்களை தருகிறார்கள் அறிஞர்கள்.

ஒரு விளக்கம் அது ஒரு ஏமாற்றத்தின் அல்லது ஏக்கத்தின் (Frustration)  வெளிப்பாடாக இருக்கலாம் என்கிறார்கள. 'அது தன்னது அல்ல. அதைத் தான் தொடர்ந்து வைத்திருக்க முடியாது'என்பதால் எற்பட்டதாக இருக்கலாம்.

இருந்தபோதும் இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை.



மற்றொரு விளக்கம் ஏற்புடையதாகத் தெரிகிறது. தீவிரமான உணர்வு எழுச்சிகள் வெடித்துக் கிளம்பும்போது மூளை நரம்புகளின் வினையாற்றல் திரிவு படலாம் என்பதாகும். அதாவது தீவிரமான நேர்மறை உணர்வுகள் எழுந்து அது செயற்பாடாக மாறும்போது நேர்மறையானது போன்ற தோற்றத்தைக் கொடுக்கலாமாம்.

அண்மையில் ஒரு விழா நடந்தது. மகனுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. தந்தையும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். விருது வழங்கப்பட்டபோது மகிழ்ச்சியால் கைதட்டி மகிழ்ந்தார். நிகழ்ச்சியாளர்கள் அவரை மேடைக்கு அழைத்து 'உங்கள் மகனுக்கு விருது கிடைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்'எனக் கேட்டார்கள்.

அவரால் எதுவும் பேச முடியவில்லை. வாய் கொன்னித்தது. சொற்கள் சிதறி புரியாதவாறு வெளிப்பட்டன. கண்களிலிருந்து நீர் வெளிப்பட்டது. தேம்பித் தேம்பி அழுதார்.

மகன் பரிசு பொற்றதில் அவருக்கு ஆனந்தமா கவலையா? ஆனந்தம்தான்
ஆனால் அவரது மூளையால் அந்த தீவிர உணர்ச்சி வெளிபப்hட்டிற்கு சரியான முறையில் வினையாற்ற முடியவில்லை. சிரிப்பதற்கு பதில் அழுகை வந்தது.

'ஆனந்தக் கண்ணீர்'எங்களுக்குத் தெரியாததா என்பீர்கள்.


நாம் ஆண்டாண்டு காலமாக உணர்ந்ததை புரிந்ததை இப்பொழுது புது விளக்கமாக் கொடுக்கிறார்கள் என்பீர்கள். உண்மைதான் ஆனால் அறிவியல் மொழிகளில். ஆம் எமது வாழ்வில் அனுபவங்கள் கற்றுக் கொடுத்தவற்றை ஆய்வாளர்கள் புது ஆய்வுகளாகத் தருகிறார்கள். புது விளக்கங்களும் தருகிறார்கள்.

இதை நாம் ஏளனம் செய்ய வேண்டியதில்லை. அனுபவங்களுக்கான விஞ்ஞான விளக்கங்கள் ஆய்வுகள் மூலம் கிடைப்பதையிட்டு மகிழ்வு கொள்ளலாம்.

மீண்டும் செல்லச் சீண்டல்களுக்கு வருவோம். இதனால் கிடைப்பது ஆனந்தம் மட்டும்தானா?

அதனால் எமக்கு நன்மைகளும் ஏற்படுகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

  • நளினத்தின் மீதான ஈர்ப்பானது ஒருவரது நுணுக்கமான கைவினைத்திறனின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கிறதாம்.
  • ஏதாவது ஓன்றின் மீது அக்கறை வைத்திருக்கும் கால அளவை அதிகரிக்கிறதாம்.  
  • உற்பத்தித் திறனையும் அதிகரிக்கிறதாம் 
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.000.0


Viewing all articles
Browse latest Browse all 292

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>