Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய்

$
0
0
சீழ்கட்டிகளோடு பலரை அண்மையில் பார்க்க நேர்ந்தது. இது ஆச்சரியமான விடயமல்ல. கொழுத்தும் வெயில் காலத்தில் இவை அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான்.


யாருக்கு எங்கே?

இது யாருக்கும் ஏற்படக் கூடிய நோய். என்றாலும் கூட உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை நலிவடையைச் செய்யச் செய்யும் நீரிழிவு, சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கு வரக் கூடிய சாத்தியம் மிக அதிகமாகும்.
பிரட்னிசலோன் மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகள் சாப்பிடுவோரிலும் வரக் கூடும். சுகாதாரத்தை நன்கு பேணினால் சீழ்கட்டிகள் தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவாகும்.

சீழ்கட்டிகள் என்பது ஆபத்தான நோயல்ல என்ற போதும் வேதனை அளிக்கின்றவையாக இருக்கின்றன.  சருமத்தில் உள்ள முடி வேர்களில் கிருமித் தொற்று ஏற்படுவதால் இவை உண்டாகின்றன. சொறிவது உராய்வது போன்றவற்றால் சழுமத்தில் ஏற்படக் கூடிய நுண்ணிய காயங்களுடாக கிருமிகள் சருமத்தைத் தாண்டி உள்ளே ஊடுருப் பெருகுவதால் கட்டிகள் ஏற்படுகின்றன.

பொதுவாக முகம், கழுத்து, அக்குள், முதுகு, தொடை போன்ற இடங்களிலேயே இவை அதிகம் தோன்றுவதுண்டு. இருந்தாலும் வேறு முடி உள்ள வேறு இடங்களிலும் தோன்றலாம். காது, மூக்கு போன்ற நொய்த இடங்களில் தோன்றும் கட்டிகள் கடுமையான வேதனையைக் கொடுக்கும்.

எவ்வாறு இருக்கும்?

கட்டி தோன்றும்போது ஆரம்பத்தில் சற்று வலி இருக்கும், தடவினால் வீக்கம் இருப்பதாக உணர்வீர்கள். உற்று நோக்கினால் அவ்விடம் சற்றுச் சிவந்து தடித்திருப்பதாகத் தென்படும். நாட்கள் செல்ல வீக்கம் அதிகரிக்கும். பின்பு கடினமமாக இருந்த வீக்கம் சற்று மெதுமையாகி தொள தொளவென மாறும். உள்ளே கட்டி கரைந்து சீழ் தோன்றியிருக்கும். சீழ் அதிகரிக்க வலியும் அதிகரிக்கும்.

கட்டிகளின் அளவுகளில் வித்தியாசங்கள் இருக்கும். கச்சான் கொட்டை அளவு முதல் டெனிஸ் பந்தளளவு அல்லது அதனிலும் பெரிதாகவும் வீங்கலாம். கட்டி பழுக்க ஆரம்பிக்கும்போது அதன் மத்தியில் சற்று மஞ்சள் நிறமாக மாற்றமுறும். இதனை மருத்துவத்தில் Pரளவரடந  என்பார்கள். 
சில அருகருகாக பல கட்டிகள் தோன்றும்போது ஒன்றுடன் மற்றது இணைந்து பெரிதாக மாறக் கூடும்.


வலி அதிகமாகி வீக்கமும் அதிகரிக்கிறது எனில் நீங்கள் மருத்துவரை நாட நேரிடலாம். ஆனால் சில கட்டிகள் தானாகவே உடைந்து சீழ் வெளியேற வலி தணிந்துவிடும். உடைந்து சீழ் வெளியேறிய பின்னரும் சில நாட்களுக்கு அதிலிருந்து கசிவு ஏற்படக் கூடும். அவ்வாறு கசிவதனால் அவ்விடத்தில் அயறு உசரளவ  போலக் காய்ந்து படிவதுண்டு.

சீழ்கட்டிகள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல கிருமியின் தாக்கத்தால் ஏற்படுவதாகும். கிருமித் தொற்றுக் காரணமாக உடலில் அலுப்பு வேதனை ஏற்டலாம். சில நேரங்களில் காய்ச்சலும் தோன்றக் கூடும். சிலருக்கு அது தோன்றுவதற்கு முன்னர் அவ்விடச் சருமத்தில் சற்று அரிப்பு ஏற்படுவதுண்டு.

நீங்கள் செய்யக் கூடியது எவை?

சிறிய வேதனை அதிகமற்ற கட்டி எனில் உடடியாக மருத்துவரை நாட வேண்டியதில்லை. அது தானாகவே உடைந்து சீழ் வெளியேறிய பின்னர் குணமாகும்.

சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளில் பலதடவைகள் செய்ய வேண்டும். இது வேதனையைத் தணிக்க உதவும். அத்துடன் கிருமி பெருகுவதையும் குறைக்கும்.


கைகளால் அழுத்தியோ அல்லது பிளெட் போன்ற கூரிய ஆயதங்களால் வெட்டியோ சீழை நீங்களாக அகற்ற முற்பட வேண்டாம். சீழ் அகலுவதற்குப் பதிலாக கிருமிகள் பரவி நோயை தீவிரப்படுத்தலாம்.

கட்டி தானாக உடைத்துவிட்டால் தொடர்ந்தும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து அழுக்குகள் முழுமையாக வெளியேற உதவுங்கள். சீழ் வடிந்து கொண்டிருந்தால் அந்த இடத்தை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
அந்த இடத்தை நீங்கள் தொட்டால் சுத்தமாக நன்கு கை கழுவிய வேண்டும்.

அதேபோல நோயாளி உபயோகித்த, துணி. டவல், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவர் உபயோகித்த துணிமணிகளை நன்கு கழுவி உலர்ந்த பின்னரே மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவற்றை சுடுநீரில் கழுவுவதும் சிறந்தது.

புண்ணிற்கு மேல் போடும் மருந்துக் கட்டுகளை அகற்றிய பின் அவற்றை வெளியிடங்களில் வீச வேண்டாம். அதிலிருக்கும் கிருமிகள் பலவேறு விதமான நோய்களைப் பரப்பும். காற்றுப் புகாதவாறு பையில் கட்டி தனியாக அகற்றவும்.

சிலர் கட்டி தோன்றினால் அல்லது அது உடைத்தால் நீர் படக் கூடாது என எண்ணி கழுவக் குளிக்காமல் இருப்பார்கள். இது மிகவும் தவறானது. சுகாதாரம் பேணப்பட வேண்டும். எனவே கிருமி அகல்வதற்கு நன்கு குளிப்பது கழுவுவது அவசியமாகும்.

மருத்துவரிடம் செல்ல நேரிட்டால்


ஏற்கனவே குறிப்பட்ட முறைகளில் பேணியும் நோய் தீராவிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். அவ்விடத்தை மரக்கச் செய்து சிறுசத்திர சிகிச்சை மூலம் சீழை அகற்றுவார்.


ஆனால் அவ்வாறு செய்வதற்குக் காலம் கனிய வேண்டும். கட்டு கடுமையான வலியைக் கொடுத்தாலும் இறுகிய கட்டியாக இருக்கும்போது கீறுவதில் பயனில்லை. அது பழுத்து நொய்து வந்த பின்னர்தான் மருத்துவர் மேற் கூறியவாறு கீறி சீழை அகற்றுவார்.

ஆன்ரிபயரிக் மருந்துகள் இவற்றைக் குணமாக்க பெரிதும் உதவமாட்டா. கட்டியைச் சுற்றியுள்ள சருமத்திலும் கிருமி பரவியிருந்தால், அது பரவாதிருக்க அவை உதவும்.

அக்குள் கட்டு


அக்குளில் தோன்றும் கட்டு சற்று வித்தியாசமானது. இங்கு ரோமம் அவர்த்தியாக இருப்பதால் பல சிறு சிறு கட்டிகள் இணைந்திருப்பதுண்டு. இதற்கு வாயில் நுழைய சிக்கல்ப்படும் பெயர் இருக்கிறது.


Hidradentis Suppurativa என்பார்கள். அதற்கு பெரும்பாலும் கைவைத்தியம் உதவாது.  சுத்திரசிகிச்சை தேவைப்படும். அத்துடன் நீண்ட நாட்களுக்கு அன்ரிபயோரிக் கொடுக்க நேரிடும். அதனை பூச்சு மருந்தாகவோ உட்கொள்ளும் மருந்தாகவோ கொடுக்க நேரிடும்.

குண்டிக் கட்டு

குண்டித் தசைகளுக்கு இடையே முள்ளந்தண்டு முடிவடையும் இடமருகே ஒருவகைக் கட்டு (Pilonidal Cyst) தோன்றுவதுண்டு.


போதுவாக நீண்ட பிரயாணங்களுக்குப் பின் தோன்றலாம். கடும் வலியுடன் உட்கார முடியாதிருக்கும். இதற்கும் சத்திர சிகிச்சை தேவைப்படும்.


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0



Viewing all articles
Browse latest Browse all 292

Trending Articles


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


எல்லாம் நாடக மேடை – பாடலாசிரியர் யார்?


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


தேசிய விருது பெற்ற படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறன்


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


ரயில் டிக்கெட் முன்பதிவு: சூப்பர் வசதிகள் அறிமுகம் - இனி ஈஸியா டிக்கெட் புக்...


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


நாராயண பட்டத்ரி


பாக்கியசாலிகளாக்கும் காமாட்ஷி அம்மன் நவாவரண பூஜை


ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்த விவேக்